காஷ்மீர் சென்றுள்ள 15 நாட்டு தூதர்கள் குழு அதிகாரிகளுடன் சந்திப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சென்ற 15 நாடுகளின் தூதர்களிடம்  காஷ்மீர் நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி விளக்கினர்.  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது சட்டப்பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் நிலவரம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் எம்.பி.க்கள் குழு கடந்த அக்டோபரில் ஆய்வு செய்தது. இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய 15 நாடுகளின் தூதர்கள் நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றனர். அவர்களுக்கு தலைமை செயலாளர் சுப்ரமணியன், டிஜிபி திங்பங் சிங் ஆகியோர் காஷ்மீர் நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகுறித்து விளக்கினர். சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டபின், மக்கள் உயிரிழப்பு ஒன்று கூட ஏற்படவில்லை என தெரிவித்தனர். தலைவர்கள் கைது, இன்டர்நெட் தடை, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தூதர்களின் கேள்விக்கு அவர்கள் பதில் அளித்தனர். பின் சிவில் சொசைட்டி அமைப்பினரை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து தூதர்கள் குழு கேட்டறிந்தது.

Related Stories: