வருமான வரி தாக்கல் படிவம் விதிகள் தளர்வு

புதுடெல்லி: வருமான வரி தாக்கல் படிவம் தொடர்பாக அறிவித்த புதிய விதிகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் மீண்டும் மாற்றம் செய்துள்ளது.  ஆண்டுக்கு 50 லட்சம் வரை சம்பள வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர்-1, வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர்-4 படிவம் தாக்கல் செய்கின்றனர். இந்நிலையில்,  ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பங்குதாரராக கொண்டு சொந்த வீடு வைத்துள்ள தனி நபர்கள் நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் ஐடிஆர்-1 சஹஜ், ஐடிஆர்-4 சுகம் படிவங்களை பயன்படுத்த முடியாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவித்திருந்தது.   இதுபோல், ஆண்டுக்கு ₹1 லட்சம் மின் கட்டணம் செலுத்தியவர்கள், வெளிநாட்டு பயணத்தில் ₹2 லட்சத்துக்கு மேல் செலவு செய்தவர்கள் எளிய முறையில் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.  இந்த கெடுபிடி விதிகளை சிபிடிடி தளர்த்தியுள்ளது. இதன்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பங்குதாரராக கொண்டு சொந்த வீடு வைத்துள்ள தனி நபர்கள், பிற விதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் எளிய முறையிலான ஐடிஆர்-1 சகஜ், ஐடிஆர்-4 சுகம் படிவங்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

Related Stories: