கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள்

பேரவையில் திமுக உறுப்பினர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம், “திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் 40 ஏக்கரில் மருத்துவ கல்லூரி அமைக்க ஆணை வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கல்லூரிஅமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடலூரில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும்” என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் றுகையில், ‘‘கடந்த 3 ஆண்டில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. தற்போது கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க முதல் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: