பேடிஎம் டாப் அப் புது சிக்கல்

மும்பை: பேடிஎம் டாப்  அப் செய்பவரா நீங்கள்? பொதுவாக கிரெடிட் கார்டு மூலம் தான் டாப் செய்பவர் என்றால் இனி 2 சதவீத கட்டணம் போடப்படும். பேடிஎம் மூலம் பஸ், ரயில், விமான கட்டணம் முதல் ஷாப்பிங் வரை செய்வது வாடிக்கையாகி விட்டது. பலரும் இதை பயன்படுத்த காரணம், இதில் பணம் டாப் அப் செய்ய கிரெடிட் கார்டு பணத்தை பயன்படுத்தலாம் என்பதால் தான். ஆனால், இனி அப்படி செய்ய முடியாது; பேடிஎம் டாப் அப் செய்யும் போது கிரெடிட் கார்டு பணத்தை மாற்றினால் அதற்கு 2 சதவீத கட்டணம் உண்டு.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமை. அவர்களுக்கு கிடைத்து வந்த சலுகை இப்போது பறிபோவதால் பேடிஎம் மூலம் செலவழிப்போர் வேறு வழியிருக்கிறதா என்று யோசிக்க  துவங்குவர்; அல்லது பேடிஎம்மை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்வர் என்று தெரிகிறது. உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வரை கிரெடிட் கார்டு மூலம் செலவழித்து இருந்தால் 1.75 சதவீதம் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி சுமத்தப்படும்.

Related Stories: