கிருஷ்ணகிரி அருகே ஊராட்சி தலைவர் பதவியேற்பில் மோதல்... வீடு, வாகனங்கள் அடித்து உடைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்ப்பு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. மூங்கிலேறி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றி உஷா ராணி நேற்று பதிவியேற்றுக்கொண்டார். அப்போது தேர்தலில் தோற்ற ரம்யா மோகன் தமக்கு துணை தலைவர் பதவி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால் இருத்தரப்புக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து நோக்குக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மோதல் வெடிக்காமல் இருக்க மூங்கிலேறி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: