பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல், கட்டாய மதமாற்றம் ஆகியவற்றை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் , மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

பெஷாவரின் சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், அந்த இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ரவுந்தர் சிங் என்பதும், திருமணத்திற்காக பொருட்கள் வாங்க பெஷாவர் வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியா கணடனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அறிக்கை; பாகிஸ்தானில் சீக்கியர்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களையும் சீக்கிய இளம்பெண்களை கட்டாயத் திருமணம் செய்பவரையும் தடுக்க வேண்டும். மேலும் சீக்கியர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது. நான்கனா சாகிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இது நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: