மாதனூர் அருகே கலெக்டர்களை உருவாக்கிய கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாதனூர்: மாதனூர் அடுத்த குருவராஜ பாளையத்திற்கு அருகில் உள்ள சின்னப்பள்ளி குப்பம் கிராமம் மற்றும் குப்பம்பாளையம் கிராமங்கள் உள்ளது. அங்கு சுமார் ஆயிரம்  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   இந்த கிராமத்தில் பிறந்து, வளர்ந்து படித்த 2 பேர் கலெக்டர்களாகி உள்ளனர். இதில் மகேஷ்வரன் சென்னை தமிழ்நாடு வடிகால் வாரியத்திலும்  மற்றொருவரான குமார் பெங்களூருவில் கலெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர். இப்படி பெயர் பெற்ற இந்த கிராமத்தில் மக்களின் பயன்பாட்டுக்காக சுடுகாடு உள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கான வழியில்லை.

ஆறுவழியாக தான் சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று வருகின்றனர். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் சடலங்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் தனியார் விளைநிலத்தின் வழியாக சடலங்களை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சுடுகாடு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: