கேரளாவில் மத்திய உளவுத்துறை அதிகாரி மர்ம சாவு காரில் இறந்து கிடந்தார்

திருவனந்தபுரம்:  கேரள  மாநிலம், காசர்கோட்டில் மத்திய உளவுத்துறை (ஐபி) இன்ஸ்பெக்டராக  பணி புரிந்தவர் ரிஜோ பிரான்சிஸ். இவர் நேற்று காலை பேக்கல் பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இறந்து கிடந்தார். இது குறித்து  அப்பகுதியினர் காசர்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று  காரை திறந்து பரிசோதித்தனர். டிரைவர் சீட்டில் அமர்ந்த நிலையில் அவர்  இறந்து கிடந்தார். அவர் கொல்லபட்டாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா என தெரியவில்லை. இந்த மரணத்துக்கான காரணம்  குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: