வீட்டில் இருந்து நெய் எடுத்து வந்து மூலவர் சன்னதியில் விளக்கு ஏற்ற முயன்ற ரமண தீட்சிதர்: திருப்பதி கோயிலில் அர்ச்சகர்கள் மோதல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரமண தீட்சிதர் உட்பட 4 பேர் வயது மூப்பு காரணமாக கடந்த 2018 மே மாதம் அப்போதைய தெலுங்கு தேசம் கட்சியின் அறங்காவலர் குழுவால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமீபத்தில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் கவுரவ தலைமை அர்ச்சகராக ரமண தீட்சிதர் மீண்டும் நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 31ம் தேதி ரமண தீட்சிதர் தனது வீட்டில் இருந்து நெய், மலர்களை கொண்டு வந்து ஏழுமலையான் கோயில் மூலவர் சன்னதியில் உள்ள தீபத்தில் நெய்யை ஊற்றி மலர்களை சுவாமி பாதத்தில் வைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனை கவனித்த தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மற்றும் சக அர்ச்சகர்கள், இது ஆகம விதிக்கு எதிரானது என தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: