லண்டனில் நிரவ் மோடியின் காவல் நீடிப்பு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) கடன் வாங்கி மோசடி மற்றும் பம முறைகேட்டில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி (வயது 48) தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். வங்கி மோசடி தொடர்பாக அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியுள்ளது. இந்நிலையில், லண்டனில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, நேற்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரின் காவலை நீதிபதி மேலும் நீடித்தும் இந்த மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார். பிஎன்பி வங்கியில் கடன் வாங்கியது மற்றும் பண முறைகேடு உள்பட 2 பில்லியன் டாலர் (ரூ.14,000 கோடி) மோசடி செய்ததாக நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டைவிட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி, லண்டனில் பதுங்கி இருப்பது தெரிந்தது. கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

Related Stories: