தமிழகத்தில் எலைட் மதுபான கடைகளில் உயர் ரக மதுபாட்டில் விலை 2,000 வரை உயர்வு : நாளை முதல் அமல்

வேலூர் :  தமிழகத்தில் எலைட் மதுபான கடைகளில் உயர்ரக மதுபாட்டில் விலை 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் 4,700 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் ஒன்று முதல் 8க்கும் மேற்பட்ட எலைட் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானம், பீர், ஒயின், ஸ்காட்ச், பிராந்தி உள்ளிட்ட மதுபான வகைகள் விற்கப்படுகின்றன.

இந்த கடைகளில் ஆப் மற்றும் புல் வரையிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், எலைட் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் உயர்ரக மதுபாட்டில் விலையை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: 1,280க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 1,520க்கும், 1,490க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயின் 1,550க்கும், 1,420க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயிட் ஒயின் 1,560க்கும், 1,370க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 1,570க்கும், 1,610க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயிட் ஒயின் 1,870க்கும், 1,750க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 2,020க்கும், 5,300க்கு விற்பனை செய்யப்பட்ட 700 மில்லி பிராந்தி 7,800க்கும், ₹2,810க்கு விற்பனை செய்யப்பட்ட 700 மில்லி பிராந்தி 3,260க்கும், 240க்கு விற்பனை செய்யப்பட்ட 330 மில்லி உயர்ரக பீர் 290க்கும் விற்பனை செய்ய வேண்டும். இந்த விலை உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: