மீ்ண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தாரா? கோத்தபய ராஜபக்சே: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2  இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். மேலும், மீனவர்களின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று 13 மீனவர்கள் கைது, இன்று மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு போன்ற சம்பங்கள் காரணமாக மீனவர்கள் மீன்பிடி கடலுக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: