தமிழக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது: வைகோ பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நீதிக்கு எதிராகவே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடை இழந்துள்ளது.

அதற்கான விதிமுறைகளை தமிழக அரசு முறைப்படி நடைமுறைப்படுத்தாமல், 69 சதவீத இடஒதுக்கீடை பெறாமல் மத்திய அரசுக்கு துணைபோய் வஞ்சகம் செய்துள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் மதிமுகவும் சேர்ந்து வழக்கு தொடர்ந்துள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

மேலும், அரசியல் கட்சியினரையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது பாசிச போக்கை காட்டுகிறது. அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் சீர்கேடு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, இந்த அரசுக்கு சிறந்த நிர்வாகத்தை செய்கிறது என்று பாராட்டுவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக நடக்கும் செயல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் என்பதை மதவாத பாசிச நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ்.ன் மறைமுக அட்டவணையை நிறைவேற்றுவதற்குதான் இதுபோன்ற நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: