குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு அளித்து வரலாற்று தவறை செய்து விட்டது: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: செல்வாக்கு இல்லாத கட்சிகள் போராடுவதாக முதல்வர் கூறியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக போராடுவோர் உணர்வுகளை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தியுள்ளார். சொந்த நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெறாத பழனிசாமி செல்வாக்கு பற்றி பேசுவது மிகப்பெரிய நகைச்சுவை. செல்வாக்கு இல்லாத கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக முதல்வர் கூறியதற்கு கண்டனம் என கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் இப்போது பாஜக அரசு கொண்டு வரும் பதிவேட்டுக்கும் வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி இல்லையேல் குடியிருப்புகளை அடிப்படையாக வைத்து கணக்கெடுக்க எதிர்ப்பு வந்ததும் கைவிடப்பட்டது. ஈழத்தமிழர் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைத்து விட்டு முதல்வர் கபடநாடகம் ஆடக்கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக போராடும் இந்தியர்களின் உணர்வுகளை சிறுமைப்படுத்தியுள்ளன. மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால்தான் எடப்பாடி பழனிசாமி சொல்வதை மக்கள் நம்புவார்கள்.

மதரீதியாக பிளவு உண்டாக்கிட தேசிய குடியுரிமை பதிவேட்டை தயாரிக்க மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் திட்டம் கொண்டு வந்துள்ளது. நாடே கொந்தளிக்கும் ஒரு பிரச்சனையின் உண்மையை தெரிந்து கொள்ளாமல் ஒரு முதலமைச்சர் பேட்டியளிக்கிறார். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு அளித்து வரலாற்று தவறை செய்து விட்டது. ஏதும் தெரியாத அப்பாவி போல முதலமைச்சர் பழனிசாமி நாடகமாடுவதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.

பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதலமைச்சரின் கண்களையும் பொது அறிவையும் மறைத்திருக்கிறது. பாஜக அரசின் ஏவல் அரசாக இருப்பதுதான் அதிமுக ஆட்சி. தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பின்றி முதல்வர் செயல்படுகிறார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: