கர்நாடக மாநிலம் கனகபுராவில் 114 அடி உயர இயேசு சிலை அமைக்க அடிக்கல்: டி.கே.சிவகுமாருக்கு பாஜ எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில்  114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை அமைக்க, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் அடிக்கல் நாட்டியதற்கு  பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள்து., கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர்டி.கே.சிவகுமார். முன்னாள் அமைச்சரும் கூட. அரசியலுடன் கல்வி, தொழிற்சாலைகள் நடத்தி வருவதின் மூலம் தொழிலதிபராகவும் உள்ளார்.  இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள ராம்நகரம் மாவட்டம், ஹாேரபெலலே கிராமத்தில் தனது  சொந்த செலவில் இயேசு கிறிஸ்துவின் 114 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்க,  கடந்த 25ம் தேதி அடிக்கல் நாட்டினார். ஓராண்டுக்குள் சிலை அமைக்கும் பணி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிவகுமாரின் இந்த முயற்சியை பலர் வரவேற்றுள்ள நிலையில், பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘சோனியா காந்தியின் ஆதரவு பெற்று கட்சியின் கர்நாடக மாநில தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில் சிலை வைத்துள்ளார்’ என பாஜ எம்பி அனந்த்குமார் ஹெக்டே தனது டி்விட்டரில் பதிவு செய்துள்ளார். ‘இயேசுவின் சிலையை நிறுவுவது மூலம் ேசானியாவின் இதயத்தில் சிவகுமார் இடம் பிடித்துவிட்டார். இனி, சித்தராமையாவாலும் அவருடையை வளர்ச்சியை தடுக்க முடியாது. பாரதத்தில் பல இந்து கடவுள்கள் இருக்கும்போது இயேசுவுக்கு சிலை வைப்பதின் மூலம் காங்கிரசில் தன்னை பெரிய சக்தியாக வளர்த்து கொள்ளும் முயற்சியை அவர் எடுத்துள்ளார்,’ என்று அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: