தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சந்தனமர கடத்தலை தடுக்க சிறப்பு வனக்குழு ரோந்து

செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு வனப்பகுதியில் கேரள வனத்துறை சார்பில் சுமார் 30 ஏக்கரில் சந்தன மரங்கள் தென்மலை, கடமன்பாறை, கோட்டை வாசல் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு குழு சந்தன மரங்களை வெட்டி கடத்த இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஆரியங்காவு மற்றும் தென்மலை மலைத்தொடர்களில் அரிபாவில் உள்ள வன பயிற்சி மையத்தைச் சேர்ந்த 50 வன அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு நேற்று முதல் தனது ரோந்து பணியை துவங்கி உள்ளது. இந்த குழு தென்மலை மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: