போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய வாலிபருக்கு கத்திக்குத்து: 4 பேர் கும்பல் வெறிச்செயல்

பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து  கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வாலிபரை 4 பேர் கும்பல் கத்தியால்  குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். பெங்களூரு ஜே.பிநகரை சேர்ந்தவர்  வருண். நேற்று காலை இவர், பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் நடந்த குடியுரிமை  திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த  போராட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு சிறிது  நேரம் போராடிய அவர், கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து வீ்ட்டிற்கு  தனியாக நடந்து சென்றார். கலாசிபாளையம் சரகத்திற்குட்பட்ட ஜே.சிரோடு  பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 4 பேர் கும்பல் இவரை  வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு சென்றனர்.

பலத்த காயமடைந்த அவர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை  மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது  குறித்து கலாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக வருண் மீது தாக்குதல்  நடத்தினார்கள் என்று போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து  தனிப்படை அமைத்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி  வருகின்றனர்.

Related Stories: