உள்ளாட்சி தேர்தலுக்கு சமூக வலைதளத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு: ஹைடெக் ஆக மாறும் பிரசாரம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சமூக வலை தளங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 16,678 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில்,  85 மனுக்கள் தள்ளுபடியானது. 2,418 பேர் வாபஸ் பெற்றனர். 801 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 13,350 பேர் போட்டியிடுகின்றனர்.

வரும் 27 மற்றும் 30ம் தேதி என 2 கட்டமாக மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 19ம் தேதி மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் முதல் பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில், வேட்பாளர்கள். தங்களது சின்னங்களை கூறியும், தேர்தல் அறிக்கை வெளியிட்டும், வாக்கு சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Related Stories: