சித்த மருத்துவமனை இயக்குனராக டாக்டர் மீனாகுமாரி நியமனம்

சென்னை: தாம்பரத்தில் செயல்பட்டுவரும் தேசிய சித்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் மீனாகுமரி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரத்தில் கடந்த 2004ம் ஆண்டு தேசிய சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கு 2005ம் ஆண்டு முதல் பல்வேறு விதமான நோய் பாதிப்புகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், இந்த மருத்துவமனையே நாட்டின் முதல் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆகும். இங்கு பல்வேறு விதமான மருத்துவ ஆராய்ச்சி, பக்கவாதம், கீழ்வாதம், முடக்குவாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுதவிர மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக பணிபுரிந்து வந்த டாக்டர் பானுமதி பணி ஓய்வு பெற்றதையடுத்து, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து வந்த டாக்டர் மீனாகுமாரி தேசிய சித்த மருத்துவத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: