திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தி தயாரிக்கும் மையத்தில் தீ விபத்தை தடுப்பது எப்படி?..ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தி தயாரிக்கும் மையத்தில் தீ விபத்தை தடுப்பது குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தினந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் லட்டு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கோயிலுக்கு வெளியே பூந்தி தயார் செய்யப்பட்டு கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு லட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூந்தி தயாரிக்கும் மையத்தில் தரை மற்றும் சுவற்றில் நெய் திட்டுகளால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே நெய் திட்டுகளை எவ்வாறு அகற்றுவது, தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,  தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திருமலை தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட்ராமி ரெட்டி தலைமையில் பூந்தி தயாரிக்கும் மைய ஊழியர்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்றும் பயிற்சி அளித்தனர்.

Related Stories: