அறிவியல் கட்டுரைகளை தயாரித்து வெளியிடும் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா

வாஷிங்டன்: உலகளவில் அறிவியல் கட்டுரைகளை அதிகளவு வெளியிடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில்  இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி: அறிவியல் மற்றும் விஞ்ஞான கட்டுரைகளில் 20.67% வெளியிட்டு சீனா முதலிடம், 16.54% கட்டுரைகளை வெளியிட்டு அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த இரு நாடுகளூடுத்து இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது.

சீனாவில், உலகளாவிய அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கை 2008-ல் 2,49,049 ஆக இருந்தது, 2018-ல் 5,28,263 ஆக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 7.81 சதவீத வளர்ச்சி விகிதத்தில் உள்ளது. அதனை அடுத்து அமெரிக்காவின் கட்டுரைகளில் மொத்த உலகளாவிய வெளியீடுகள் 2008-ல் 3,93,979 லிருந்து 0.71 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து 2018-ல் 4,22,808 ஆக உயர்ந்தது. மேலும் இந்தியா 2008-ம் ஆண்டில் 48,998 கட்டுரைகளை வெளியிட்டிருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் அது 1,35,788 கட்டுரைகளாக அதிகரித்துள்ளது.

விஞ்ஞான கட்டுரை வெளியீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் சீனாவை ஒப்பிடுகையில் இந்தியா இன்னும் பல மடங்கு கட்டுரைகளை வெளியிட வேண்டியுள்ளது. மேலும் அறிவியல் மற்றும் பொறியியலில் மொத்த உலக வெளியீடுகளில் 5.31 சதவீத கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: