குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்: மனுக்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

டெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து, வருகின்ற ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிக்கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை  எதிர்த்து திமுக, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக பல்வேறு மதரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அரசிமைப்பின் சட்டப்பிரிவு 14ன் கீழ் தவறு என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி காவை, சூர்யா காந்த் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியுடைய மூத்த தலைவரான கபில் முதலில் தனது வாதத்தை முன்வைத்தார்.

அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். அதேபோல திமுக தரப்பில் ஆஜரான வில்சன், முஸ்லீம்கள் மட்டுமின்றி இலங்கை தமிழர்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களையும் இந்த சட்டதிருத்தத்தில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக  மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றம்:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 334 உறுப்பினர்களும், எதிராக 106 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து அங்கு நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதராக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாகியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு:

குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையிலிருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவைகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: