டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு: டெல்லி இணை ஆணையர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் காரணமாக டெல்லியின் முக்கிய இடங்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்து நடைபெற்ற போராட்டத்தின் போது சீலபம்பூர் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு்ள்ளன. போராட்டக்காரர்களை பறக்கும் கேமராக்களை இயக்கி போலீஸ் கண்காணித்து வந்தனர்.

மேலும் நேற்று டெல்லியின் ஜாபர்பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் கலைத்தனர். ஜாமியா நகரில் போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில் ஜாபர்பாத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை மக்களவை எதிர்கட்சி தலைவர்கள் சோனியா காந்தி தலைமையலி சென்று குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். டெல்லி மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் பல்வேறு மாட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: