மது வாங்கி தராததால் தொழிலாளி கொலை நண்பனுக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், 9வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45), கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் பரமசிவம், காலி பாட்டில்களை பொறுக்கி விற்பனை செய்து கொண்டு, அண்ணா சாலை பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார். இருவரும்  ஒன்றாக மது அருந்துவது பழக்கம். மேலும், யார் மது வாங்கி தருவது என்பதில் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018 பிப்ரவரி 5ம் தேதி மது அருந்த பணம் தருமாறு ஜெயக்குமார், பரமசிவத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பரமசிவம் தரவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த பரமசிவம், அருகே கிடந்த ஒரு சிமென்ட் கல்லை எடுத்து ஜெயக்குமாரின் முகத்தில் அடித்துள்ளார். அதில் ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சரவணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டேவிட் ஆஜராகி வாதிட்டார். வழக்கின் அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த நிலையில், பரமசிவத்தின் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: