ஆந்திராவில் அரசு வழங்கும் மலிவு விலையில் வெங்காயம் வாங்குவதற்காக பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு பலர் காயம்

பார்வதிபுரம் : நாடு முழுவதும் வெங்காய விலை ஏற்றத்தை அடுத்து ஆந்திர மாநில அரசு சலுகை விலையில் மாநிலம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் ஆதார் அட்டை வைத்து ஒருவருக்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்குவதற்காக குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

இன்று விஜயநகரம் மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள உழவர் சந்தையில் இன்று காலை வெங்காயம் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால் உழவர் சந்தை கேட்  திறந்த உடனே அனைவரும் ஒருவருக்கொருவர் முந்திச் செல்ல முயன்று  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்து பின்னர் வெங்காயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை பார்வதிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Related Stories: