திருச்சியில் ஏர் இந்தியா சார்பில் வேலை வாய்ப்பு முகாம் இந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை தமிழக இளைஞர்கள் ஏமாற்றம்

ஏர்போர்ட்: வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் இந்தி பேசத்தெரிந்த வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் தமிழக இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர்.ஏர் இந்தியா வான் போக்குவரத்து சேவை சார்பில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக தென் மண்டல இளைஞர்கள் பங்குபெறும் வகையில் மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் வாடிக்கையாளர் ஏஜென்ட், ஹேன்டி மேன், ஹேன்டி உமன், ஏர் இந்தியா விமான நிலைய வாகன பராமரிப்பு மற்றும் கையாளுதல், வாகன ஓட்டுநர் என 46 பணியிடங்களுக்கு இன்று திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேர்காணல் நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான தகுதி அடிப்படையில் நடைபெறும் இந்த நேர்காணலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனர். மேலும் வடமாநிலத்தை  சேர்ந்தவர்களும் இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். திருச்சியில் பணி நியமனத்திற்கு ஏர் இந்தியா வான் போக்குவரத்து சேவை நிறுவனமானது தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்தி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென் மாநில பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த கலந்தாய்வில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அதேநேரம் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.   நேர்காணல் நடைபெறும் பகுதியில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: