எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்ளாட்சிக் களம் அழைக்கிறது, நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது என்ற தலைப்பில்திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மரண அடி வாங்கியது அதிமுக தான். ஜனநாயகம் காக்கும் திமுகவின் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஜனநாயக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க திமுக தவறியதுமில்லை. தயங்கியதுமில்லை. அதிமுக ஆட்சியில் ஊராட்சிகள் எத்தகைய அவலட்சணத்தில் உள்ளது என்பது ஊரறிந்த செய்தி.

Advertising
Advertising

அவசர கோலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான். நாடாளுமன்றத் தேர்தல் கள வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் கள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. வெற்றி தோல்வியை கடந்து தேர்தலை நாடி எதிர்கொள்ளும் உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக தான். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி உள்ளாட்சி கட்டமைப்பை பலப்படுத்தியது திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் கிராம கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான நிதியை ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஊராட்சிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சியில் தான். உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும் போது, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய போகிறது என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மக்கள் பக்கம் நி்ற்போம், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி காண்போம். அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறுவதன் மூலம் வெற்றியின் இலங்கை அடைந்திட முடியும். மக்களின் நலனில் அக்கறை உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் களமிறக்கிட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக மாவட்ட செயலாளர்கள் ஆகப்பூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும். மக்களின் பேராதரவு திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது, என்று கூறியுள்ளார்.

Related Stories: