நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்தில் தொடங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் ரூ.15 லட்சத்தில் முடிவடைந்தது. ஏலம் முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சித்ரா ராமசந்திரன் என்பவர் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எடமேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலத்தில், பெண் வேட்பாளர்களின் கணவர்கள் பங்கேற்றனர். ஊராட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான நபரை ஏலம் தேர்ந்தெடுத்தனர். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்தும் ஏலம் விடுவது தொடர்கிறது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உறுப்பினர் பதவி, முருகன் என்பவருக்கு ரூ.14 லட்சத்துக்கும், ஊராட்சித்தலைவர் பதவி, ரெங்கராஜ் என்பவருக்கு ரூ.10 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆனந்த் என்பவருககு ஒன்றிய துணைத்தலைவர் பதவி ரூ.2.92 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>