தொடர்ந்து நடைபெறும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலம்: தற்போது தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்

தஞ்சாவூர்: தஞ்சையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனிடையே அங்குள்ள திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக தெரிகிறது. சுரேஷ் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன் தொகையாக 2 லட்சம் ரூபாயை நாளைய தினத்தில் கட்டிவிட வேண்டும் என்றும், மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை வருகிற 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும், அவ்வாறு செலுத்த தவறினால் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தியும் 15-ஆம் தேதி அன்று முழு தொகையை கட்ட வேண்டும் என இந்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனுர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் அளித்தனர். சேகர் என்பவரை பிஞ்சனுர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்து ஊர்க்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: