போலி பால் அட்டை தயாரித்து மோசடி கண்காணிப்பாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை: மதுரை ஆவினில் பரபரப்பு

மதுரை: மதுரை ஆவினில் போலியாக பால் அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில், கண்காணிப்பாளர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை, ஆவின் பழங்காநத்தம் தெற்கு மண்டலத்தில் சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவர் முத்துநாயகம். இவரது அலுவலகத்தில் முதுநிலை பணியாளராக பணியாற்றியவர் உமாதேவி. இவர்கள் இருவரும் ேசர்ந்து போலியாக பால் அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

விசாரணையில் இருவரும் போலியாக பால் அட்டை தயாரித்து 1 லட்சத்து 35 ஆயிரம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை மதுரை ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கார்த்திகேயன் விசாரித்து இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: