பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி குறைப்பு

புதுடெல்லி: கடன்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டியை, பாரத ஸ்டேட் வங்கி 0.1 சதவீதம் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை இந்த ஆண்டில்  இதுவரை 1.35 சதவீதம் குறைத்துள்ளது. இதற்கேற்ப வங்கிகளும் வட்டியை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது. ஆனால், வங்கிகள் இதுவரை 0.44 சதவீத வட்டி குறைப்பு பலனை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி எம்சிஎல்ஆர் அடிப்படையில், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர்-ஐ 0.1 சதவீதம் குறைத்து 7.9 ஆக நிர்ணயித்துள்ளது. இது இன்று அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories:

>