உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு... நாளை மறுநாள் விசாரணை

டெல்லி: உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.  தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 27 மற்றும் 30-ம் தேதி, 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பார்கள் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையும், டிசம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி  தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை. இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று  திமுக  உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது. திமுக-வின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் நாளை  விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>