தங்கத்தை விட கிடுகிடுவென உயரும் வேகம் கொள்ளையடிக்கும் பொருளா வெங்காயம்?

போடா வெங்காயம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா? அப்படி ஒரு சொலவடை வரக்காரணம் அதன் மலிவு மற்றும் பரந்து கிடைப்பதால் தான். கிலோ 2 ரூபாய்க்கு விற்ற காலம் உண்டு. இப்போது வெங்காயம் 200 ரூபாயை எட்டிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்தபடி இருக்கும் வெங்காயம், இறங்கி வரும் என்ற நம்பிக்கை அறிகுறி கூட இல்லை. ஆனால்,‘நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை’ என்று சொல்லும் அளவுக்கு நிதி அமைச்சர் பதில் இருக்கிறது என்று பலரும் வேதனைப்படுகின்றனர். தங்கத்தின் விலையை தாண்டி விடும் அளவுக்கு வெங்காயம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. வெங்காயம் டன் கணக்கில் பதுக்கப்படுகிறது; கொள்ளையடிக்கப்படுகிறது; வெங்காயம் திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைக்கின்றனர்; பணத்தை வைத்து விட்டு வெங்காயத்தை திருடும் அவலம் நேர்ந்துள்ளது; வெங்காயத்தை பெண்ணுக்கு சீதனமாக தரும் ேபாக்கு காணப்படுகிறது; மொத்தத்தில் வெங்காயம் பொதுவான பொருளாக ஆரம்பித்து, அத்தியாவசிய பொருளாக மாறி, கடைசியில் கேலிக்குரிய பொருளாக ஆக்கி விட்டது பாஜ அரசு என்று பேசத்துவங்கி விட்டனர்.

Advertising
Advertising

வெங்காயத்துக்கும் அரசியலுக்கும் அதிக தொடர்பு உண்டு. முதன் முதலில் 1980ல் ஜனதா ஆட்சியை தேர்தலில் வெங்காயத்தை வைத்தே கவிழ்த்தவர் இந்திரா காந்தி.  2013ல் காங்கிரஸ் ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டது வெங்காயத்தால். ஆனால் சமாளித்ததால் சிக்கலில் இருந்து விடுபட்டது. கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது வெங்காயம் கிலோ  20 ரூபாய் என்ற நிலையில் இருந்து 80 ரூபாய் வரை  அதிகரித்தது. அப்போது  ஐந்து மாநில தேர்தல் நடக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் நொந்து விட்டது;  பாரதிய ஜனதா பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஆட்சிகளை கவிழ்த்த வெங்காயம் இப்போது 200 ஐ தொடுகிறது. என்ன செய்யப்போகிறது பாஜ அரசு? இதோ நான்கு திசைகளில் ஒரு அலசல்.

Related Stories: