ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடியில் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 6 ம்தேதி (வெள்ளிக்கிழமை) விக்னேஷ்வர பூஜை, கனபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 7ம்தேதி (சனிக்கிழமை) கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இன்று (8 ஆம் தேதி) காலை கோபூஜை, கணபதி பூஜை, இரண்டாம் கால பூஜை, நாடிசந்தனம், பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புரப்பாடு நடைபெற்று மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரி யார் ரவிசுந்தர் முன்னின்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டார்கள் மற்றும் பரமதயாளன், கண்ணன், பாரி ஆகியோர் செய்திருந்தனர். கும்பா பிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: