மாடுகளை வளர்ப்பது சிறைக் கைதிகளின் குற்ற மனநிலையை குறைக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

புனே: பசு மாடுகளை வளர்ப்பதால், கைதிகளின், குற்ற மனநிலை, நன்றாக குறைவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளது. இந்த நிலையில் புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்; மாடுகளை வளர்ப்பது சிறைக் கைதிகளின் குற்ற மனநிலையை குறைக்கும் என கூறினார்.

Advertising
Advertising

பசு நமக்கெல்லாம் தாய், சிறைகளில் பசுக்களை வளர்த்த கைதிகளின் குற்றவியல் மனநிலை குறைந்துள்ளது. பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள ஜெயிலர்கள் தம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் மூலம், கைதிகளின் குற்ற மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, தம்மால் அறிந்து கொள்ள முடிந்திருப்பதாகவும் கூறினார். நாடு முழுவதும் உள்ள சிறைகளில், பசு மாடுகள் வளர்ப்பதை கைதிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார். இது உலக அளவில் நிறுவப்பட வேண்டுமானால் ஆவணங்கள் அவசியம்.

வேண்டுமானால் குற்றவாளிகளை உளவியல் பகுப்பாய்விற்கு உட்படுத்துங்கள், பசுவை வளர்த்த பிறகு. நாம் மீண்டும் மாற்றங்களைக் கவனித்து அதன் புள்ளிவிவர நிகழ்தகவை எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். அத்தகைய ஆவணம் ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து வரும்போது, உண்மை நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: