கோட்டயம் அருகே பட்டப்பகலில் 8ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து பலாத்காரம்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: தண்ணீர் கேட்பதுபோல வீட்டுக்குள் புகுந்து 8ம் வகுப்பு  மாணவியை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபர் சிக்கினார். கேரளாவின் கோட்டயம் அருகே காஞ்சிரப்பள்ளி  பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சுமார் 25 வயது  மதிக்கத்தக்க ஒரு வாலிபர் கதவை தட்டி தண்ணீர் கேட்டுள்ளார். அந்த வீட்டில்  8ம் வகுப்பு படிக்கும் மாணவி இருந்துள்ளார். அவர் அப்போதுதான் பள்ளியில்  இருந்து திரும்பியிருந்தார். அந்த மாணவியின் பெற்றோர் வெளியே  ெசன்றிருந்தனர். வீட்டில் மாணவி மட்டுமே இருந்துள்ளார்.

Advertising
Advertising

இந்த  நிலையில் கதவை திறந்த மாணவி தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார். வீட்டில்  யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட வாலிபர், மாணவியை  பலாத்காரம் ெசய்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிதுநேரத்தில்  திரும்பி வந்த பெற்றோர் மகளின் நிலையை கண்டு  காஞ்சிரம்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம்  விசாரித்தனர். விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்தது காஞ்சிரம்பள்ளி கரிம்புக்கயம் பகுதியை சேர்ந்த  அருண் சுரேஷ்(28) என்பது தெரியவந்தது.  அவரை போலீசார் கைது செய்தனர்.  இச்சம்பவம்  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: