லஞ்ச புகாரில் சிக்கிய எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் டிரான்ஸ்பர்

சென்னை:சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜசேகர், காவலர் அசோக் குமார், சன்னி லாய்டு ஆகியோர்  திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் சில நாட்களுக்கு முன்பாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் பதுக்கி வைத்திருந்த லேப்டாப்புகளை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் கைது செய்வதில் பணம் விளையாடியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியே தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, 3 பேரும் அதிரடியாக அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் முத்துகிருஷ்ணன், வேப்பேரி காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், சிறப்பு உதவிய ஆய்வாளர் ராஜசேகர், வேப்பேரி காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் புஷ்பராஜ், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை வேலூர் மாவட்டத்துக்கும், திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் அசோக் குமார் மற்றும் சன்னி லாய்டு ஆகிய இருவரை திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து இணை கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச வழக்கில் சிறப்பு எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: