கோவை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3,000 கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது.

அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 75 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கிளை நிலையத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் என மொத்தமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: