தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் டிவிட்

சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர் பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். மேலும் உடனடி நிவாரணப் பணிகளையும்  தொடங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: