சட்டரீதியான விஷயங்களை பூர்த்தி செய்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

சென்னை: “சட்டரீதியான விஷயங்களை பூர்த்தி செய்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் கிரிராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் இன்றைக்கு மாவட்டங்களை பிரித்திருக்கிறார்கள். இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. மாவட்டங்களை பிரிக்காமலே தேர்தலை நடத்தியிருக்கலாம். மாவட்டங்களை பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கலெக்டர்களை நியமித்திருக்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். வருவாய் கோட்ட அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். ஆனால் உள்ளாட்சிகளிலேயே அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை இந்த அரசு அளிக்கவில்லை. இதன் உள்நோக்கம் என்னவென்றால் எப்படியேனும் குளறுபடிகளை உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு இந்த நடவடிக்கைகளை அவசர கதியில் செய்து முடித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு அப்படி செய்து முடித்து விட்டு, அவற்றை தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாவட்ட அளவில் நிர்வாகத்தை அமைக்கவில்லை. இதன் காரணமாக நிச்சயம், எதிர்வரும் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற விஷயங்களில், முறைப்படி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துக்கு போய் சேராது. இதனால் தான் திமுக நீங்கள் தேர்தலை விரைந்து நடத்துங்கள்.

அப்படி தேர்தலை விரைந்து நடத்துவதற்கு முன்பாக சட்டரீதியான விஷயங்களை பூர்த்தி செய்து விட்டு நடத்துங்கள் என்று மீண்டும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியிருக்கிற அந்த ஆவணங்களையும் தாக்கல் செய்து மனுவாக அளித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இன்றைக்கு மாநில தேர்தல் ஆணையர் உன்னிப்பாக படித்தார். படித்து விட்டு நிச்சயம் இதன் அடிப்படையில் ஆணையம் நிச்சயம் செயல்படும். அதன் பிறகு தேர்தலை நடத்தும் என்றும் கூறியிருக்கிறார்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories: