டோக்கியோ: ஜப்பானின் மிக மூத்த பிரதமரான யசுஹிரோ நகாசோனி நேற்று காலானார். அவருக்கு வயது 101. ஜப்பானில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 1987 வரை 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் யசுஹிரோ நாகசோனி. ஜனநாயக கட்சி தலைவரான அவர், இரண்டாம் உலகப் போரில் தோற்ற நாடு என்ற ஜப்பான் மீதான களங்கத்தை துடைத்தவர். தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா உடனான உறவை பலப்படுத்தினார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகனுடன் நட்பு பாராட்டினார்.