தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 4 பேர் குண்டாசில் கைது

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (40). பிரபல ரவுடி. இவர் மற்றும் சென்னையில் 3 கொலை மற்றும் 15 கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய செங்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கவுதம்சூர்யா (24), அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகரை சேர்ந்த மோகன் (25), பாடிக்குப்பம் ரோடு பெரியார் நகரை சேர்ந்த டேனியல் (23) ஆகிய 4 பேரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற முதியவர் கைது:எழும்பூர் மியூசியம் அருகே போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் மியூசியம் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.விசாரணையில் ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரை சேர்ந்த மஸ்தான் (62) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மஸ்தானை கைது செய்து 1.3 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: