பாரத் பெட்ரோலியம் சொத்து மதிப்பு எவ்வளவு?: விவரம் சமர்ப்பிக்க 50 நாள் கெடு

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு  விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டு 50 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.  பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டுக்குள் ₹1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பொரேஷன் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் பங்குகளை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், அதாவது மார்ச் மாதத்துக்குள், தனியார் மயம் ஆக்கி விட வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.

 முதல் கட்டமாக. பொதுத்துறை நிறுவன முதலீடு மற்றும் சொத்து நிர்வாக துறை மூலம், பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்க விருப்பம் உள்ளவர்களிடம் அதற்கான கடிதம் பெறப்படும். பின்னர் ஏலம் விடப்படும். இதன்படி மேற்கண்ட துறையிடம் 50 நாட்களுக்குள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பு குறித்து மூன்றாம் நபரின் மதிப்பீடு பெறப்பட உள்ளது.  இதன் அடிப்படையில் பங்கு விற்பனை பணிகள் மேற்கொள்ளப்படும். இதே போன்றுதான் பிற பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை நடைமுறைகள் பின்பற்றப்படும்  என மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related Stories: