புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தது: தமிழக அரசு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டமான காஞ்சிபுரம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதேபோல நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும் மேலும் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம் பெறும் வருவாய் கோட்டங்கள் தாலுகாக்கள் பற்றியும் அறிக்கையும்  வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, ராணிப்பேட்டை வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பிரியாவும், தென்காசி வருவாய் அலுவலராக கல்பனாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: