இலங்கையின் 8-வது அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே காலை 7 மணிக்கு தொடங்கியது

கொழும்பு: இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.அண்டை நாடான இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

சமீபத்தில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டவர்களை கொன்றதால், இலங்கை மக்கள் இப்போதும் ஒருவித பீதியுடனே உள்ளனர். இதனால், வாக்குப்பதிவு மையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் மொத்தம், 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், முதல், 2வது, 3வது என வேட்பாளர்களை வரிசைப்படுத்தி வாக்களிக்க வேண்டும். இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும். ராஜபக்சே அதிபராக இருந்தபோது கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார்.தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: