கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த பெண்ணின் இடதுகால் அகற்றம்

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த பெண்ணின் இடதுகால் அகற்றபட்டது. சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் குறைந்தன. தமிழக முதல்வா் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த வழியாக இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவா், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோா் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞா் காயமடைந்தார். இதனையடுத்து சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. குறிப்பாக இடது காலில் ரத்த நாளம் என்பது துண்டிக்கப்பட்டு இருந்தது. வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தொடர்ந்து மயக்க நிலையிலேயே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அவர்கள் உறவினர்கள் ஒருவரிடம் சிகிச்சை நிலவரம் குறித்து பேசிய போதுதான் இடது காலில் ரத்த என்பது துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை நேற்று இரவு நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், தொடர்ந்து அவர் மயக்க நிலையிலேயே இருந்து வருகிறார். அவரது இடது கால் ரத்த நாளத்தின் துண்டிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது அவரது கால் அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories:

>