இரண்டாம் காலாண்டில் வோடபோன் ரூ. 50 ஆயிரம் கோடி, ஏர்டெல் ரூ. 23 ஆயிரம் கோடி இழப்பு

டெல்லி: இரண்டாம் காலாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன.

புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன. இதையடுத்து ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அந்நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஐடியா-வோடபோன் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஏர்டெல் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதன்மைத் தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதத்தின் மீதான வட்டி என 28 ஆயிரத்து 450 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: