மாணவி பாத்திமா தாயாரின் கூற்று, தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் ஐஐடி உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து மாணவர்களையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தனக்கு தரப்பட்ட மன உளைச்சலாம் மாணவி பாத்திமா லத்தீப் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலைக்கு முன்பு பாத்திமா எழுதியுள்ள குறிப்பில் சில பேராசிரியர்கள் பெயர்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தமது மக்களை சிறுமைப்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கி விட்டதாக பாத்திமாவின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை குறித்து நேர்மையான விசாரணைக்கு அரசு உடனே உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் மர்மத்தீவு போல உள்ளது. சாதி, மத, பேதம் கொண்ட சனாதன போக்கின் அடிப்படையில் மாணவர்களை நடத்துவது விபரீத விளைவுகளுக்குக் காரணமாகிறது.

கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை எதிர்த்து நம் இந்திய தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>