விலாங்கு மீன் தோட்டம்

நன்றி குங்குமம் முத்தாரம்

தோட்டத்தில் உள்ள செடிகளைப் போல கடலுக்கடியில் வாழும் ஓர் உயிரினம் கார்டன் ஈல் என்றழைக்கப்படும் விலாங்கு மீன். பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடலின் அடிமட்டத்தில் இருக்கும் வெதுவெதுப்பான இடங்களில் இவை வாழ்கின்றன. செடியின் வேர்களைப் போல உடலின் பாதிப்பகுதியை நிலத்துக்குள் புதைத்துக்கொண்டிருப்பதால் இதற்கு கார்டன் ஈல் என்று பெயர்.

கூட்டமாக வாழும் இவற்றை புகைப்படம் எடுப்பது ரொம்பவே அரிதானது. சமீபத்தில் அமெரிக்கப் புகைப்படக்காரர் டேவிட்டின் கேமராவில் பசிபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான கார்டன் ஈல்கள் அகப்பட்டிருக்கிறது. விதவிதமான கோணத்தில் அவர் புகைப்படமெடுக்க, ‘அண்டர் வாட்டர்’ புகைப்பட வகைமையில் அவை பரிசுகளை அள்ளிவருகின்றன.

Related Stories:

>