எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான காலம் 54ல் இருந்து 50 மாதங்களாக குறைப்பு: பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையிலும் மாற்றம்!

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான காலத்தை 54ல் இருந்து 50 மாதங்களாக குறைத்துள்ள இந்திய மருத்து கவுன்சில், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையிலும் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்பான புதிய அறிக்கையை அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், எம்பிபிஎஸ் படிப்புக் காலம் என்பது இதுவரை 54 மாதங்களாக இருந்த நிலையில், இது இனி 50 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேப்போல தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு பாடமும் இனி இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும்.

Advertising
Advertising

அதோடு ஒவ்வொரு தாளிற்கும் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் செய்முறை பயிற்சி தேர்வு நடைபெறும். இந்த தேர்வு மாற்றங்கள், கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து பயிலும் மாணவர்களை பாதிக்காது. எம்பிபிஎஸ் படிப்புக்கான திறன் அடிப்படையிலான பாடத்திட்டம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டாம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவம் மூன்றாம் ஆண்டில் சேர்க்கப்படும். முதல் ஆண்டு 13 மாதங்கள், இரண்டாம் ஆண்டு 11 மாதங்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு 12 மாதங்கள் மற்றும் 14 மாதங்கள் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே ஒரு தேர்வு நடைபெறும்.

அந்த முறையில் எழுத்துத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள், வாய்மொழித் தேர்வுக்கு 20 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் மற்றும் இன்டர்நெல் அஸ்ஸெஸ்மென்ட் மதிப்பெண்களையும் கொண்டிருக்கும். புதிய முறையில், ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு தாள்கள் என்ற அடிப்படையில் இரண்டு தேர்வுகள் நடைபெறும். இவ்விரண்டு தேர்வுகளுக்கும் 200 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, கிளினிகல் தேர்வு என அனைத்துக்கும் 100 மதிப்பெண்களும் அளிக்கப்படும். ஒரு மாணவர் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு என குறைந்தது 50 மதிப்பெண்களை எடுத்தால்தான் பல்கலைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: